உங்கள் உடல் சர்க்கரை அளவு மற்றும் உடல் எடை குறித்து நீங்கள் கவலைப்படாமல், சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் “இனிப்பு” என்ற வார்த்தை உங்களை எந்த வகையிலும் பயமுறுத்தாது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் இயற்கை பொருட்கள் பல உள்ளன. இந்த பொருட்களை சரியான நேரத்தில் சரியான வகையில் எடுத்துக்கொண்டாலே நீழிரிவு நோயை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்று சொல்லக்கூடிய உணவுதான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு.
இனிப்பு உருளைக்கிழங்கு அல்லது சீனிக்கிழங்கு என்று சொல்லப்படும் இந்த கிழங்கை வறுத்து எலுமிச்சை பழம் மற்றும் மசாலா தூவி, தெரு ஓர கடைகளில் விற்கப்பட்டாலும் இந்த உணவு சாதாரண மனிதனின் சூப்பர்ஃபுட் என்று பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கிழங்கு பெரிய நன்மை தரும்.
உங்கள் உடல் சர்க்கரை அளவு மற்றும் உடல் எடை குறித்து நீங்கள் கவலைப்படாமல், சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் “இனிப்பு” என்ற வார்த்தை உங்களை எந்த வகையிலும் பயமுறுத்தாது. ஊட்டச்சத்து மிகுந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாவுச்சத்துள்ள உருளைக்கிழங்கைப் போலல்லாமல், நார்ச்சத்து, வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது.
100 கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் 70 சதவீதத்திற்கும் அதிகமான நீர் உள்ளது. இது 28 கிராம் கார்போஹைட்ரேட், 1.6 கிராம் புரதம் மற்றும் 120 கலோரிகளை வழங்குகிறது. இந்த கிழங்கை சமைத்து அதன் தோலுடன் சேர்த்து சாப்பிடும்போது போது, நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக பயன்படுகிறது. ஒவ்வொரு 100 கிராமுக்கும் 4 கிராம் நார்ச்சத்து வழங்குகிறது.
சர்க்கரை நோய்க்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு எவ்வாறு உதவுகிறது?
நீரிழிவு நோயாளிகள் வேர்கள் மற்றும் கிழங்குகள் என்று அழைக்கப்படும் நிலத்தடியில் வளர்க்கப்படும் அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்வது பொதுவான தவறான கருத்து. சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒரு வேர் காய்கறி என்றாலும், அதனை தோலுடன் வேகவைத்து உண்ணும் போது, ஒவ்வொரு 100 கிராமுக்கும் தோராயமாக 4 கிராம் நார்ச்சத்து கிடைக்கும். மேலும் இது மனநிறைவையும் அளிக்கிறது, உங்கள் பசி வேதனையை தடுக்கிறது.
உணவுக்குப் பின் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு எவ்வளவு விரைவாகவும், எவ்வளவு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டும் குறிப்பானாக தோலுடன் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஜிஐ 60 ஐக் கொண்டுள்ளது. இது அவற்றை மிதமான ஜிஐ (GI) உணவாக மாற்றுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுககு அதிக நார்ச்சத்து கிடைக்க காரணமாக இருக்கலாம். எனவே இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்.
மேலும் வழக்கமான உருளைக்கிழங்கிற்கு மாற்றாகப் இந்த சர்க்கர வள்ளிக்கிழங்கை பயன்படுத்தலாம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இன்னும் கார்போஹைட்ரேட் நிறைந்ததாக இருப்பதால், அவற்றை மிதமாக உங்கள் உணவியல் நிபுணர் மற்றும் மருத்துவர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் பயன்படுத்த வேண்டும்.
உடல் எடை மேலாண்மைக்கு பிந்தைய உடற்பயிற்சிக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு எப்படி உதவுகிறது?
பெரும்பாலும் இந்தியாவில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டின் நல்ல ஆதாரங்கள் மற்றும் உடலில் உள்ள கிளைகோஜன் அளவை நிரப்புவதற்கு அறியப்பட்டதால், உடற்பயிற்சியின் போது குறைந்து வரும் கிளைகோஜனை நிரப்பை இதை பயன்படுத்தலாம். வொர்க்அவுட்க்கு பிந்தைய ஒரு சிற்றுண்டியாகவும் இருக்கும். எனவே பனீர், பருப்பு அல்லது முட்டை போன்ற புரதத்தின் நல்ல ஆதாரத்துடன் தோலுடன் கூடிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பது, உடற்பயிற்சிக்குப் பின் ஊட்டமளிக்கும் உணவாக மாறும்.
பெக்டின் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துகள் உங்கள் உடலில் உடைக்கப்படுவதற்கு நேரம் எடுக்கும் என்பதால், அவை உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும் மற்றும் ஒவ்வொரு முறையும் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு குறையும் போது விரைவான சர்க்கரையை சரிசெய்ய உதவும். மேலும், அவை வைட்டமின் பி 5 மற்றும் பி 6 ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன, இது எடை மேலாண்மைக்கு முக்கியமான ஒரு நல்ல வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது.
Comments
Post a Comment